Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஷ்மீர், ஹரியானா தேர்தல் .. காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. காஷ்மீரில் தேசிய மாநாடு, காங்கிரஸ், தேசிய சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால், அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும் இன்ஜினீயர் ரஷீத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட சிறிய கட்சிகள், மக்கள் செல்வாக்குமிக்க சுயேச்சைகள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். இவர்கள் வாக்குகளை பிரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நேற்றிரவு வெளியிட்டன.

காஷ்மீர் நிலவரம்.. 

தைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 20-25, காங்கிரஸ் கூட்டணிக்கு 35-40, மக்கள் ஜனநாயக கட்சிக்கு 4-7, இதர கட்சிகளுக்கு 12-18 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

இண்டியா டுடே – சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-32, காங்கிரஸ் – தேசிய மாநாடு கூட்டணிக்கு 40-48 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 23-27 இடங்கள், காங்கிரஸ் – தேசிய மாநாடு கூட்டணிக்கு 46-50 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

ஹரியானா நிலவரம்..

ஹரியானாவில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியானாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சி 88 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

ஜன்நாயக் ஜனதா, ஆசாத் சமாஜ் (கன்சிராம்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதேபோல இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளன.

ரிபப்ளிக் பாரத் – மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 55 முதல் 62 இடங்கள், ஆளும் பாஜகவுக்கு 18 முதல் 24 இடங்கள், இதர கட்சிகளுக்கு 2 முதல் 5 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 44-54, பாஜகவுக்கு 19-29 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 49-61 இடங்கள், பாஜகவுக்கு 20-32 இடங்கள், இதர கட்சிகளுக்கு 3-5 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-35, காங்கிரஸுக்கு 51-61 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

துரூவ் ரிசர்ச் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 22-32, காங்கிரஸுக்கு 50-64, இதர கட்சிகளுக்கு 2-8 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!