Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரவி மோகனுடன் கெனிஷா பிரேக் அப்

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இடையிலான உறவு முடிவுக்கு வந்துள்ளது. கடுமையான ஆன்லைன் கேலி மற்றும் மன உளைச்சல் காரணமாக, தான் சென்னை நகரத்தை விட்டு விலகுவதாகவும், ஜெயம் ரவியுடனான தொடர்பை துண்டிப்பதாகவும் கெனிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக அறிவித்துள்ளார் .

கெனிஷா அறிக்கை: ஜெயம் ரவிக்கு எதிரான அவதூறுகள் மற்றும் தொடர்ச்சியான இணையத் தாக்குதல்களால் தான் மிகவும் சோர்வடைந்துவிட்டதாகவும், இனி அந்தப் போராட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை என்றும் கூறி அவரிடம் இருந்து விலகுவதாக கெனிஷா தெரிவித்துள்ளார். மன அமைதிக்காக தான் சென்னையை விட்டு வெளியேறுவதாகவும், இசை மற்றும் தெரபி போன்ற தனது பணிகளில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தன்னைப்பற்றி அவதூறாகப் பேசுவதைத் தடை செய்யக் கோரி ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, கெனிஷா மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், கெனிஷாவுக்குத் தடை உத்தரவு பிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!