Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிஷப்பை முட்டாள் என விமர்சித்த கேரள முதல்வர்… கடும் எதிர்ப்பு

லோக்சபா தேர்தலில் கேரளாவில் உள்ள, 20 தொகுதிகளில், ஒரு தொகுதியில் மட்டுமே, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு, முதல்வர் பினராயி விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கேரளாவின் யாக்கோப்படை சிரியன் திருச்சபையின் முன்னாள் பிஷப் கீ வர்கீஸ் கூரிலோஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் .. தேர்தல் தோல்வியிலிருந்து கம்யூனிஸ்டுகள் பாடம் கற்க வேண்டும்.  இல்லாவிட்டால் மேற்கு வங்கம், திரிபுராவில் ஏற்பட்ட நிலை கட்சிக்கு ஏற்படும். கடந்த 2018ல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கொரோனா காலத்தில் திறம்பட செயலாற்றியதால் தான் இடது சாரி முன்னணி 2021ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. எப்போதும் வெள்ளம், தொற்று நோய்கள் உதவ முடியாது என குறிப்பிட்டிருந்தார். இது  குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் கருத்து கேட்ட போது … பிஷப்பின் அறிக்கையை பார்த்தேன். இதிலிருந்து பாதிரியார்களில் கூட முட்டாள்கள் இருக்கலாம் என தெரிகிறது என கிண்டலாக கூறினார்.  முதல்வரின் இந்த கருத்துக்கு கிறிஸ்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள எதிர்க்கட்சி தலைவர் காங்கிரசின் சதீசன் கூறுகையில் பினராயி விஜயன் விமர்சனங்களை சகித்துக் கொள்ள வேண்டும். அவர் தன் கட்சிக்குள் அல்லது வெளியே எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!