பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசரகால மருந்துகள் மற்றும் உணவு பொருட்கள் அடங்கிய மேலும் 37.5 டன் நிவாரண பொருட்களை மத்திய அரசு தனது ராணுவ விமானம் மூலம் இன்று (ஆக.27) அனுப்பி வைத்துள்ளது. ஏற்கனவே 10 டன் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேபாளத்தின் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
