திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (ஆக.27) ஒரே நாளில் 77,568 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூ.4.19 கோடி வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அன்று மட்டும் 35,033 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ள நிலையில், 4.15 லட்சம் லட்டுகள் விற்பனையாகி, 2.38 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுப் பயனடைந்துள்ளனர். மேலும், இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 22 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க தரிசனம் செய்ததாக கோயில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
