Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரேஷன் கடையில் இனி மண்ணெண்ணெய் விநியோகம்! – 21 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி.

எரிசக்தித் தட்டுப்பாட்டை தவிர்க்க, அவசரக்கால நடவடிக்கையாக அடுத்த 60 நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசால் அடையாளம் காணப்படும் 2 பொதுத்துறை பெட்ரோல் பங்க்குகளில் நேரடியாகப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் தற்காலிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் பங்க்குகளில் அதிகபட்சமாக 2,500 லிட்டர் மண்ணெண்ணெய் சேமித்து வைக்கலாம் என்றும் மாநில அரசுகள் தேர்வு செய்யும், மாவட்டத்திற்கு 2 பெட்ரோல் பங்க்குகளில் 5,000 லிட்டர் மண்ணெண்ணெய் சேமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

error: Content is protected !!