Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேசிய அளவிலான கிக் பாக்ஸ்சிங்… கரூர் மாணவி சாதனை… ரூ.1.50 லட்சம் பரிசு…

கொல்கத்தாவில் வெஸ்ட் பெங்கால் ஸ்போர்ட்ஸ் கிக்பாக்ஸ்சிங் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான கிக்பாக்ஸ்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஆண்டு நடைபெற்றது. போட்டியில் கரூர் அடுத்த தாத்தாவடி கிராமத்தைச் சேர்ந்த தனியார் (பி.ஏ.வித்யாபவன்) மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஜெய்ஸ்ரீ 3-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். சென்னையில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த மாணவியை பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இளைஞர்

நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கி கவுரவித்தார். இதனையடுத்து மாணவியை பள்ளியின் துணைத்தலைவர் கணேசன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!