பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு நேற்று (அக்.18) அப்போலோ ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் அவர் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அன்புமணிக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை – மருத்துவமனை அறிக்கை!
