Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ்.பாபு கவலைக்கிடம்..

கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ்.பாபு கவலைக்கிடம்..

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றார். இது தொடர்பாக அவர் செய்யும் செய்கை இணையத்தில் வைரலாகி பிரபலமானார். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இன்று மாலை 4 மணிக்கு அவரது உடல்நிலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட எம் ஜி எம் மருத்துவமனை, “வி எஸ் பாபுவின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பல்வேறு மருத்துவ நிபுணர்கள் குழு கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வி.எஸ் பாபுவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

error: Content is protected !!