தமிழக காவல் துறையில் 1993ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட 300 பேர் கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு பயிற்சி முடித்த அவர்கள் தற்போது வெவ்வேறு மாவட்டங்களில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் என பல பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் தாங்கள் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அனைவரும் மீண்டும் சந்திக்க திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து, 300 பேரும் கோவை உப்பிலிபாளையம் காவல்துறை சமுதாயக் கூடத்தில் இன்று ஒன்றிணைந்தனர். அனைவரும் பச்சை நிற சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து, தாங்கள் பயிற்சி பெற்ற காலத்தை நினைவு கூர்ந்து, ஒன்றாக விருந்து சாப்பிட்டு கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர். மேலும் அந்த ஆண்டு பயிற்சி அளித்த அதிகாரிகள் அனைவரையும் கவுரவித்து மகிழ்ந்தனர்.