Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் கல்லூரி மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது….

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த (17) வயது மாணவி கோவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வெளியே சென்ற மாணவி கல்லூரிக்கு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் மாணவியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் இறுதியாக மாணவிடம் பேசியது சாத்தூரை சேர்ந்த டிரைவர் ஞான பிரகாசம் என்பதும் அவர்கள் இருவரும் ராமேஸ்வரம் பகுதியில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ராமேஸ்வரம் சென்ற கோவில்பாளையம் காவல்துறையினர் மாணவியை மீட்டதுடன் டிரைவர் ஞான பிரகாசத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!