இரவின் நிழல்’ படத்தை அடுத்து நடிகர் பார்த்திபன் ‘டீன்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த மாதம் படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் பணியாளராக கோவையைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் பணிபுரிந்திருக்கிறார்.

படத்தின் முக்கிய காட்சிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க முடியாது என்றும் சிவபிரசாத் சொல்லி இருக்கிறார். இதுமட்டுமல்லாது, கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி ரூ. 88.38 லட்சம் கேட்டு பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். இதனால், கோபமடைந்த பார்த்திபன் சிவபிரசாத் மீது பந்தயசாலை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார். மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
