Skip to content
Home » முதியவர்களை குறிவைத்து ATM-ல் பணம் திருடும் பலே திருடன்… வீடியோ….

முதியவர்களை குறிவைத்து ATM-ல் பணம் திருடும் பலே திருடன்… வீடியோ….

  • by Senthil

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(62). விவசாயியான இவர் கடந்த 31ம் தேதி தனது மகளுக்கு பணம் அனுப்ப காரமடை சாலையில் உள்ள sbi ஏடிஎம் மையத்துக்கு சென்றார். அவருக்கு பணம் செலுத்துவது பற்றி தெரியாததால் ஏடிஎம் முன் நின்றிருந்த அடையாளம் தெரியாத நபரிடம் ரூ.49.500 கொடுத்து தனது மகளின் வங்கி கணக்கில் செலுத்து மாறு கூறி உள்ளார் பணத்தை வாங்கிய அந்த நபர் ஏடிஎம்மில் பணம் செலுத்துவது போல் நடித்து விட்டு ரூ.1000 மட்டும் திரும்ப வந்து விட்டது என சிவசாமியிடம் கொடுத்துள்ளார்.

மீதம் உள்ள ரூ.48.500 உங்களது மகள் கணக்கில் செலுத்தப் பட்டு விட்டது என கூறி விட்டு சென்று விட்டார். இதனை நம்பிய சிவசாமி மீண்டும் வீடு திரும்பினார். இந்த நிலையில் சிவசாமி, தனது மகளிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.அப்போது அவரது மகள் தனக்கு பணம் வந்து சேரவில்லை என கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசாமி வங்கிக்கு சென்று கேட்டபோது உங்களது மகள் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஏ. டி. எம்மில் உள்ள சிசிடிவி கேமரா காட்சியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் மேற்கொண்டு விசாரணையில் கோவை கரும்பு கடை பகுதியை சேர்ந்த ராஜா முகமது இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர் இருக்கும் இடத்தை கண்காணித்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார்

இன்றைய தினம் கோவை ஒத்தக்கால் மண்டப பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் அங்கு சென்று ராஜா முகமது பிடித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேட்டுப்பாளையம் மட்டும் இன்றி தமிழகத்தில் பல இடங்களில் இதே மாதிரி சம்பவங்களை அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 10,500 மற்றும் 18 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!