Skip to content
Home » முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திருப்பதியில் திடீர் மரணம்…

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திருப்பதியில் திடீர் மரணம்…

  • by Senthil

கோவை முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ். 66 வயது. கோவை செல்வராஜ் என அழைக்கப்படும் இவர் அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் செயல்பட்டார். பின்னர் அந்த அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் செய்தி தொடர்பாளராக இருந்தார்.
இவரது மகள் திருமண நிகழ்ச்சி திருப்பதியில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு விட்டு, கீழே இறங்கிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது உடல் கோவை கொண்டு வரப்படுகிறது. நாளை இறுதிச்சடங்குகள் நடக்கிறது. இவரது மரண செய்திக்கேட்டு, திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!