Skip to content
Home » கோவை அருகே சிறுவன் -சிறுமி யோகாவின் இருவேறு நூதன சாதனை….

கோவை அருகே சிறுவன் -சிறுமி யோகாவின் இருவேறு நூதன சாதனை….

  • by Senthil

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன்,ரம்யா ஆகியோரது மகள் ரித்விகா அதே பகுதியில் உள்ள கோவை பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ரித்விகா யோகா கலையில் பயிற்சி பெற துவங்கி ஒராண்டில் கின்னஸ் உட்பட பல்வேறு சாதனைகளை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.தனது ஆறு வயதிலேயே மதுரை தமிழ்ச்சங்கம் இளம் சாதனையாளர் விருது பெற்ற இவர் புதிய சாதனையாக,தனது இரு கால்களை மட்டுமே பயன்படுத்தி ஆறு முட்டைகளை எடுத்து சிறிய கோப்பையில் எடுத்து வைத்து சாதனை புரிந்துள்ளார். பனிரெண்டு விநாடிகளில் இவர் செய்த இந்த நூதன சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.இதே போல,அதே பகுதியை சேர்ந்த செந்தில்

குமார்,கவுசல்யா ஆகியோரின் மகன் சித்தேஷ்.அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் இவர்,.யோகா கலையில் முக்கிய ஆசனமான திம்பாசனத்தில் நின்றபடி, 30 விநாடிகளில் தரையில் 30 முறை மார்பை தொட வைத்து எழுந்து அசத்தினார்.

யோகாவில் மிக அரிதான இந்த கலையை செய்த சிறுவன் சித்தேஷ் கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார்.ஒரே பள்ளியில் பயிலும் இரூவர் செய்த இரு வேறு சாதனைகளையும் கண்ட கூடியிருந்த மாணவ,மாணவிகள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.தொடர்ந்து இருவரும் செய்த நூதன சாதனை இரண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது..சாதனை மாணவன் சித்தேஷ் மற்றும் சிறுமி ரித்வாகவிற்கு கோவை பப்ளிக் பள்ளியின் தலைவர் பழனிசாமி கோப்பை,சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் பள்ளியின் டீன் சனு ஜோசப்,முதல்வர் ஜெகதீஷ் மற்றும் யோவா யோகா அகாடமி இயக்குனர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!