Skip to content
Home » கோவையில் தாகத்தால் தள்ளாடும் பறவைகள்…. தண்ணீர் தரும் பறவை ஆர்வலர்..

கோவையில் தாகத்தால் தள்ளாடும் பறவைகள்…. தண்ணீர் தரும் பறவை ஆர்வலர்..

பறவை இனங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இவைகள் விதைகளை எச்சம் மூலம் பரப்பி செடி கொடி மரங்களை உருவாக்கி சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது.

இந்நிலையில் தற்போது கோவையில் அதிகரித்து வரும் கோடை வெயிலால் நீர்நிலைகள் வற்றிப் போய் வறண்டு வரும் நிலையில் விலங்குகள் மற்றும் பறவைகள் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றன. இதனால் வனவிலங்குகள் கூட நகருக்குள் படை எடுத்து வருகிறது.

இதில் பறவைகள் வெயில் தாங்காமல் தண்ணீர் இன்றி அழிந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பறவைகள் வெயில் தாங்காமல் சுருண்டு விழும் சம்பவங்களும் நடக்கிறது.

இந்நிலையில் கோவையைச் சேர்ந்த பறவை ஆர்வலர் சிட்டுக்குருவி பாண்டியராஜன் பறவைகளுக்கு தண்ணீர்

அளிக்கும் விதமாக கோவை மாநகர பகுதியின் பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான தொட்டிகளை வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறார்.

ஒர்க் ஷாப் தொழில் செய்து வரும் இவர் பறவைகளுக்காக நேரம் ஒதுக்கி தண்ணீர் ஊற்றி வருவது அனைவரின்

கவனத்தை ஈர்த்துள்ளது.

இது குறித்து சிட்டுக்குருவி பாண்டியராஜன் கூறுகையில்,

“தான் சிறு வயதிலிருந்து பறவை இனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தற்போது நிலவி வரும் கோடை வெயிலில் மனிதர்களுக்கே அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. மனிதர்களுக்கு தண்ணீர் தேவை என்றால் கடைகளில் வாங்கி அருந்தி கொள்வார்கள். ஆனால் பறவைகள் அப்படி செய்ய முடியாது. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் பறவைகளுக்கு தான் தண்ணீர் வைத்து வருவதாகவும், அதேபோல் அனைவரும் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் அல்லது சுற்று சுவர் பகுதியில் சிறிய அளவிலான பாத்திரங்களில் பறவைகளுக்கான தண்ணீரை ஊற்றி வைத்து பறவைகளை காப்பாற்ற வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!