Skip to content
Home » கோவையில் 1287 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்…

கோவையில் 1287 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்…

  • by Senthil

கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள, கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள, கே.கோவிந்தசாமி நாயுடு கலையரங்கத்தில் நடைபெற்றது… கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் முனைவர் அசோக் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் குமார் ராஜேந்திரன்,மற்றும் கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் முனைவர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் இரத்தினமாலா ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில்,சிறப்பு விருந்தினராக,புது டில்லியில் உள்ள உயிர்த்தொழில் நுட்பத் துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப

அமைச்சகத்தின் மற்றும் மனித வள மேம்பாட்டுத்திட்ட பிரிவு தலைவர்,அறிவியல் விஞ்ஞானி முனைவர் கரிமா குப்தா கலந்துகொண்டு விழாச் சிறப்புரையாற்றினார்.அப்போது பேசிய அவர்,தொழில் நுட்ப வளர்ச்சியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக சுட்டி காட்டினார்..இதனை இளம் தலைமுறை மாணவ,மாணவிகள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.தொடர்ந்து 1287 மாணவ,மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கினார். இதில் 38 பேர் பல்கலைக்கழக தகுதி பெற்ற மாணவர்களாக சிறப்பு பரிசுகள் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் இவ்விழாவில் D.B.T ஸ்டார் கல்லூரி திட்டம், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜேந்திரன் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் கே ஜி கலை அறிவியல் கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள்,  பேராசிரியர்களும், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!