Skip to content
Home » குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மின்சாரம் கட்டு நோயாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள் பாதிப்பு.

கரூர் மாவட்டம் குளித்தலையில் , மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறதுஇந்த மருத்துவமனையில் குளித்தலையை  சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்து கர்ப்பிணி தாய்மார்கள் முதியோர்கள் மற்றும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் பலர்  சிகிச்சை பெற்று வருகின்றனர்

குறிப்பாக இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு தாய் சேய் மற்றும்  சிசு பராமரிப்பு மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

இந்த நிலையில் நேற்று  மாலை 3 மணிக்க திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மின்சாரம் இல்லாததால் கடுக்பையில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், அவசர சிகிச்சை நோயாளிகள் கடுமையான வெயிலால் பெட்டில் இருக்க முடியாமல் மரத்தடியில் இருக்கும் அவல நிலை  ஏற்பட்டது. எனவே  ஜெனரேட்டரை இயக்க முற்பட்டனர். அப்போது ஜெனரேட்டரும் இயங்கவில்லை.  உடனடியான  மின்  வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மின் துறையினர் வந்து   மின்தடைக்கான காரணத்தை கண்டுபிடித்து சீர் செய்தனர். அதன் பிறகு மாலை 6 மணிக்கு தான் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.

3 மணி நேரம் மின்தடையால்  அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள்  கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.  பிரசவித்த

தாய்மார்கள் அவர்களின் உறவினர்கள் குழந்தையை அறையில் வைத்திருக்க முடியாமல் மரத்தடியில் அமர்ந்து  விசிறி மூலம் குழந்தையை பாதுகாத்து வருகின்றனர்

மாவட்ட நிர்வாகம் கடுமையான வெயில் காலங்களை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனையில் மின் துண்டிக்கப்படாத வகையில் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கும்  வகையில் மின்சாரம்  தடையின்றி வழங்க வேண்டும் என பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த மருத்துவமனையில் மிகப்பெரிய ஜெனரேட்டர் வசதி இருந்தும் நோயாளிகளுக்கு தடையில்லா மின்சார வழங்க முடியாத நிலை  இருந்து வருகிறது

தாய்மார்கள், சிசு குழந்தைகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து தடையில்லா மின்சார வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!