கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பாப்பையம்பாடியில் காளியம்மன், முத்தாலம்மன், பாம்பலம்மன், மாரியம்மன் மற்றும் மலையாள கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 28ம் தேதி கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே 29ம் தேதி பொங்கல், மாவிளக்கு மற்றும் கிடா வெட்டுதல், முத்தாலம்மன் தர ஓடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காளியம்மன் தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 
