Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை அருகே …. பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி… பிறந்தநாளன்று பரிதாபம்

குளித்தலை அருகே மருதூர் பிரிவு ரோட்டில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. ஒருவர் படுகாயம். பிறந்தநாள் அன்று உயிரிழந்த இளைஞர் உறவினர்கள் சோகம்.

திருச்சி மாவட்டம் கீழப்பஞ்சப்பூரை சேர்ந்தவர் சரண் 20. இவர் இன்று தனது பிறந்தநாள் அன்று கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள தனது நண்பரை சந்திக்க மேல பஞ்சப்புரை சேர்ந்த அமர்நாத் என்பவர் போட்டி வந்த பைக் இன் பின்னால் அமர்ந்து வந்துள்ளார்.

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மருதூர் பிரிவு ரோட்டின் அருகே வந்தபோது பின்னால்

வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக பைக்கின் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த சரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் வண்டியை ஓட்டி வந்த அவர்தான் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் காயமடைந்த அவராத்திணை 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் இறந்த சரண் உடனே குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!