Skip to content
Home » குறுவைப் பயிர்கள் 10000 ஏக்கரில் தண்ணீர் இல்லாததால் பதறாக மாறும் அவலம்….

குறுவைப் பயிர்கள் 10000 ஏக்கரில் தண்ணீர் இல்லாததால் பதறாக மாறும் அவலம்….

  • by Senthil

இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டதன் காரணமாக மாவட்டம் முழுவதும 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருக்குவளை,சூரமங்கலம், பனங்காடி, கருவேலமங்குடி,கொளப்பாடு, கார்குடி, முத்தரசபுரம், உள்ளிட்ட பல்வேறு குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் வெள்ளையாற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறுகளில் குறைவான அளவு தண்ணீர் வந்ததாலும் வாய்க்கால்களிலும் தரையோடு தரையாக தண்ணீர் சென்றதால் அவ்வப்போது டீசல் இயந்திரம் கொண்டு தண்ணீரை இறைத்தனர்.அதுவும் ஒரு ஏக்கருக்கு 1200 ரூபாய்க்கு டீசல் செலவு செய்து தண்ணீர் பாய்ச்சி வந்தனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள

குறுவை பயிர்கள்  தற்போது பால் கட்டும் பருவ நிலைக்கு பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் தற்போது இந்த வெள்ளையாற்றில் தண்ணீர் வராத காரணத்தினால் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் பால் கட்டிய நிலையில் உள்ள குறுவை நெல் பயிர்கள் பதராக மாறக்கூடிய சூழல் நிலவி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் பதறாக மாறிவிட்டால் போதுமான மகசூல் கூட கிடைக்காது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு தண்ணீரை திறந்து விட வேண்டும் இல்லையேல் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர் குறிப்பாக ஏதாவது நிவாரணம் வழங்கினால் மட்டுமே அடுத்த கட்டமாக தாளடி மற்றும் சம்பா பணியில் ஈடுபட முடியும் எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!