Skip to content

குத்தாலத்தில் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம்… வெறிச்சோடிய கடைவீதி …

  • by Authour

கோயில் மனைகளில் குடியிருப்போர், சிறு வணிகம் செய்வோர், விவசாய நிலங்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்கு வாடகையை உயர்த்தி, அத்தொகையை முன் தேதியிட்டு செலுத்த நிர்பந்திக்கப்படுவதை கண்டித்து குத்தாலத்தில் வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். குத்தாலம் சோழீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இப்பகுதி மக்கள் பலர் பல தலைமுறைகளாக குடியிருந்தும், சிறு வணிகம் செய்தும் வருகின்றனர். இவர்களுக்கு அதிக வாடகை செலுத்த கட்டாயப்படுத்தப்படுவதை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

விடுக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்று நடைபெற்று வரும் கடையடைப்பு போராட்டம் காரணமாக குத்தாலம் கடைவீதியில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக குத்தாலம் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. கோரிக்கையை வலியுறுத்தி காலை 11 மணி அளவில் இந்து சமய அறநிலையை துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

error: Content is protected !!