Skip to content
Home » ரஜினியை வம்புக்கிழுக்கும் தனுஷ் மகன்… லதா ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்…

ரஜினியை வம்புக்கிழுக்கும் தனுஷ் மகன்… லதா ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்…

  • by Senthil

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை முடித்து விட்டு ‘ஜெய் பீம்’ ஞானவேல் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் இறுதிவாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தீபாவளி, புதுவருடம், பொங்கல் போன்ற பண்டிகையின் போது ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் இருக்கும் மகிழ்ச்சியானத் தருணங்களை புகைப்படம் எடுத்து ஐஸ்வர்யா ரஜினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்வார்.

 தனது பேரன்களுடன் ரஜினி
தனது பேரன்களுடன் ரஜினி

ஒரு தாத்தாவாக ரஜினிகாந்த் தனது பேரன்களிடம் எப்படி நடந்து கொள்வார் என்றும் அவர்கள் ரஜினி மீது எந்தளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்றும் லதா ரஜினிகாந்திடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், “அவர் கணவர், அப்பா என்பதை விட தாத்தாவாக சிறப்பானவர் என்று சொல்வேன். ஐஸ்வர்யா, செளந்தர்யா குழந்தைகளாக இருந்தபோது அவர் சினிமாவில் பிஸியாக இருந்தார். அதனால், குழந்தைகளாக இருந்தபோது அவர்களிடம் செலவிட முடியாத நேரத்தை தனது பேரன்களுடன் மகிழ்ச்சியாக செலவிட்டு வருகிறார்.

தனது பேரன்களுடன் ரஜினி
யாத்ரா, லிங்கா இருவரும் எப்போதும் அவரைப் போல இமிட்டேட் செய்து கொண்டே இருப்பார்கள். குறிப்பாக, அவரது ’கபாலி’ பட வசனமான ‘நெருப்புடா’ மற்றும் ‘மகிழ்ச்சி’யை விடாமல் சொல்லிக் காட்டி அவரை வம்பிழுப்பார்கள். பேரன்கள் மூவருமே ரஜினியின் மிகப்பெரிய ரசிகர்கள். தனது பேரன்களுடன் இருக்கும் போது அவரும் குழந்தையாகவே மாறி ஜாலியாக இருப்பார்” எனச் சொல்லி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!