Skip to content
Home » லதா ரஜினி நேரில் ஆஜராக பெங்களூரு கோர்ட் அதிரடி உத்தரவு…

லதா ரஜினி நேரில் ஆஜராக பெங்களூரு கோர்ட் அதிரடி உத்தரவு…

  • by Senthil

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்’ திரைப்படம் 2014-ல் வெளியானது. இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்பு பணிகளுக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஆட்பீரோ அட்வர்டைஸிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடமிருந்து அப்படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான முரளி மனோகர் ரூ.10 கோடி கடன் பெற்றதாகவும், இதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையுடன், தமிழகத்தில் வசூலாகும் தொகையில் 20 சதவீதத்தை ஆட்பீரோ நிறுவனத்துக்கு வழங்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதில்தான் சிக்கல் ஆரம்பித்தது.

ரஜினிகாந்த்- லதா
ரஜினிகாந்த்- லதா

முரளி மனோகர் கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தராததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் அபிர்சந்த் நஹாவர் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீஸார், லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனைச் சட்டம் 196,199, 420, 463 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

பின்பு லதா ரஜினிகாந்த் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் 196, 199, 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி அவர் மீது இருந்த 3 பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து லதா ரஜினிகாந்த் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மற்றும் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினிகாந்துக்கு எதிரான இந்த மோசடி வழக்கை தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றத்திற்கு விசாரிக்க அனுமதி வழங்கியது. அப்போது, மோசடி வழக்கில் விடுவிக்கக் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும், விசாரணைக்கு நீதிமன்றம் கேட்கும் பட்சத்தில் லதா ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நான் பெயிலபிள் வாரண்டில் மீது பெயில் பெற லதா ரஜினிகாந்த் நேரில் நீதிமன்றத்தில் அடுத்த வருடம் ஜனவரி 6-ம் தேதி அல்லது அதற்கு முன்போ ஆஜராக வேண்டும் என பெங்களூரு கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!