இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் CJP கட்சி சார்பில் இன்று (அக்.10) போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற வழக்கறிஞர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டு பெரும் பரபரப்பான சூழலும் நிலவியது.
ஜந்தர் மந்தர் நோக்கி சென்ற வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தம்
