Skip to content
Home » மயிலாடுதுறையில்….. நேற்றும் ஆட்டை கடித்து கொன்றது சிறுத்தை….. தேடுதல் வேட்டை தொடருது

மயிலாடுதுறையில்….. நேற்றும் ஆட்டை கடித்து கொன்றது சிறுத்தை….. தேடுதல் வேட்டை தொடருது

  • by Senthil

 மயிலாடுதுறை அருகே கூறைநாடு செம்மங்குளம் சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் சிறுத்தை ஓடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த தகவல் அறிந்ததும் கூறைநாடு போலீசார் மற்றும் மாவட்ட வன உயிரின காப்பாளர் டேனியல் ஜோசப் தலைமையிலான வன அலுவலர்கள் வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் வலைகளை எடுத்து வந்து செம்மங்குளம் பகுதி முழுவதும் சிறுத்தையை தேடினர். ஆனாலும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. வீடுகளை விட்டு மக்கள்  யதரும் வெளியே வர வேண்டாம் என்று ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை நகரில் 9 பள்ளிகளுக்கு இன்று  3வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை புலி நடமாடுவதையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு காரணமாக மயூரா மெட்ரிக் பள்ளி,

புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி. அக்ளுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தூய அந்தோணியார் துவக்கப்பள்ளி மறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகு ஜோதி நர்சரி பிரைமரி ஸ்கூல் கேம் பிரிட்ஜ் ஸ்கூல் ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை புலி பிடிப்பதற்கு வனத்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை ஆகிய துறைகளின் மூலம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை சித்தர்காடு தண்டபாணி தெருவில்   சிறுத்தை ஒரு ஆட்டை கடித்து கொன்றது.  இன்று காலை அந்த இடத்திற்கு வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள்  சென்று  ஆய்வு செய்தனர்.

விரைவில் இச்சிறுத்தை பிடிக்கப்படும். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். ஆதலால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட  கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!