Skip to content
Home » தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை…

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு..  நேற்று (நவ.15) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.16) காலை 5.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, காலை 8.30 மணி அளவில் விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 390 கி.மீ கிழக்கு தென்கிழக்கே, பரதீப்பிலிருந்து (ஒடிசா) சுமார் 320 கி.மீ தெற்கு தென்கிழக்கே, டிகாவிலிருந்து (மே.வங்கம்) சுமார் 460 கி.மீ தெற்கு தென்மேற்கே, கேப்புபாராவிலிருந்து (வங்கதேசம்) சுமார் 610 கி.மீ தெற்கு தென்மேற்கே நிலை கொண்டுள்ளது. இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, 18-ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்லா-கேப்புபாராவுக்கு இடையே கடக்கக்கூடும். இதன் காரணமாக

  • நவ.17-ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • நவ.18 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
  • நவ.19 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
  • நவ.20 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
  • நவ.21 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!