Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மது விற்றவர் கைது.. அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

மயங்கி விழுந்து மருத்துவப் பிரதிநிதி சாவு

திருச்சி கே கே நகர் எல்ஐசி காலனி அண்ணா தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத் (42) இவர் மருத்துவப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார் இவரது மனைவி பாக்கியஸ்ரீ 35. இவர் வேலைக்கு சென்றார் அப்போது உறையூர் பகுதியில் வேலை காரணமாக சென்ற போது கோகுல்நாத் திடீரென மயங்கி தரையில் சரிந்தார் உடனடியாக அவரது சக ஊழியர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோகுல் இறந்து விட்டது என்று தெரிவித்தனர் இது குறித்து
உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்கிட்டு பெயிண்டர் தற்கொலை

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் 24 பெயிண்டர் இவர் கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லவில்லை இதனால் அவரது தந்தை மருதமுத்து அவரை வேலைக்கு செல்லும்படி கண்டித்தார் இந்த நிலையில் நேற்று ராமச்சந்திரன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளத்தனமாக மது விற்றவர் கைது

திருச்சி தென்னூர் மேட்டு தெரு அருகே கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தி கள்ளத்தனமாக மது விற்ற தென்னூர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கரிகாலன் 42 என்பவரை போலீஸ் சார் கைது செய்தனர் அவரிடம் இருந்து ரூபாய் 2200 மதிப்புள்ள 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அரிவாளை காட்டி மிரட்டி கிளீனரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது..

திருச்சி பொன்மலை மேல கல்கண்டார்கோட்டை சாமிநாத நகரை சேர்ந்தவர்
பிரேம்குமார் (19). இவர் தொழில் படிப்பு முடித்துவிட்டு தன் உறவினர் லோடு வண்டியில் கிளீனர் வேலை செய்து வருகிறார். மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அப்போது பிரேம்குமாரின் உறவினரான ஜீவா அங்கு அவரிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் இருவரும் சமாதானம் ஆகினர் இதைத் தொடர்ந்து ஜீவா தன் நண்பர்களுடன் சேர்ந்து பிரேம்குமார் வீட்டு வாசலில் திரண்டு அவரை தாக்கி அரிவாளைக் காட்டி நிறுத்தினர் இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த செல்வமணி ( 26 ) , திருச்சி சோமரசம்பேட்டை மல்லியம்பத்து பகுதியைச் சேர்ந்த ஜீவா (26) ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவர்களுடன் இருந்த ஹரிஹரன் பரமேஸ்வரன் சந்தோஷ் ஆகிய 3 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

தொழில் போட்டியில் வியாபாரிகள் இடையே அடிதடி..வாலிபர் கைது

திருச்சி சின்னக்கடை வீதி கொல்லம் மேட்டு தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (21) இவரும் மலைக்கோட்டை பசு மடம் வன்னியாடி தெருவை சேர்ந்த ராம்குமார் (30) ஆகிய இருவரும் சின்னக் கடைவீதியில் தள்ளுவண்டி கடையில் உணவு கடை நடத்தி வந்தனர். தொழிலில் போட்டி காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது இதை தொடர்ந்து ராம்குமார் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து திருநாவுக்கரசை கட்டையால் கலையில் தாக்கினார் இதில் காயமடைந்த திருநாவுக்கரசு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார் இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து ராம்குமார் ( 30 )என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவருடன் இருந்த விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.

டூவீலரில் பணம் திருடிய 2 பேர் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் தேவி மங்கலம் கீழவாநகரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (567. அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார் இவர் கூட்டுறவுத்துறை மூலமாக நான்கரை லட்சம் கடன் பெற்றார் அதோடு கடந்த நான்காம் தேதி தனது வங்கி கணக்கிலிருந்து இரண்டு லட்சத்தை தேவைக்காக எடுத்து மொத்தம் ரூ 6 லட்சத்தை கையில் வைத்து தன் டூவீலரில் சென்றார். அப்போது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களை காண டூவீலரை அப்பகுதியில் நிறுத்திவிட்டு சென்றார் திரும்பி வந்து பார்த்தபோது டூவீலரில் இருந்த பணப்பை திருடு போனது தெரிய வந்தது இது குறித்து கண்டோன்மென்ட போலீசார் வழக்கு பதிந்து திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியைச் சேர்ந்த சிவா ( 29 )மற்றும் ராஜா ( 41 )ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ஒன்றரை லட்சம் பணம் செல்போன் ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!