Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…6 பேர் பலி…

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் ஷிவாரா நகரில் இருந்து ஷேக்புராவுக்கு இன்று மதியம் ஆட்டோவில் 12 பேர் பயணித்தனர். ஷேக்புரா – சிகந்தரா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரியும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!