ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மகாலட்சுமியும் (19), சின்ன ராவும் (22) காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் மகாலட்சுமி வேறு இளைஞருடன் நடனமாடியதால் சின்ன ராவுக்கு ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகராறுக்குப் பிறகு மகாலட்சுமி காதலனை சந்திக்க மறுத்துள்ளார். இந்நிலையில், தேங்காய் வெட்டும் கத்தியுடன் வீட்டிற்குச் சென்ற சின்ன ராவ், மகாலட்சுமியை கொலை செய்தார். பின்னர் 3-வது மாடியில் இருந்து குதித்து அவரும் உயிரிழந்தார்.
வேறு வாலிபருடன் டான்ஸ் ஆடிய காதலியை கொன்ற காதலன் தற்கொலை
