ஒடிசா மாநிலம், கோராபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டிம்பூ மஜ்கி(22). இவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவில் உள்ள நூற்பாலையில், கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவரது அறையில் அருகே தங்கியிருந்த பீகார் மாநிலம், ராசிட்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோமல்குமாரி (18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதற்கு கோமல்குமாரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதலர்கள், நேற்று அறையிலிருந்து ரகசியமாக வெளியேறி, கோமல்குமாரி அணிந்திருந்த துப்பட்டாவில், இருவரும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இருவரது உடலையும் கைபற்றிய குமாரபாளையம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.