Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை துணை மேயர் மீது வழக்கு..

மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நாகராஜன். ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசிக்கும் வசந்தா என்பவர் துணை மேயர் நாகராஜனின் நண்பர்களிடம் வாங்கிய கடனுக்கு ஈடாக அவரது வீட்டை எழுதி தருமாறு கேட்டு துணை மேயரின் சகோதரர் மற்றும் நண்பர்கள் மிரட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 2024 ஜூலையில் துணை மேயர் உள்ளிட்ட அவரது நண்பர்கள் ஐவரும், வசந்தா மற்றும் குடும்பத்தினரை சாதிய ரீதியாக திட்டி மிரட்டி, தாக்கியதாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மீது துணை மேயர் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. மதுரைஇது குறித்து மாவட்ட நீதிமன்றத்தில் வசந்தா கொடுத்த மனுவின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!