Skip to content

கோவை ரயில்வே பாலத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour
கோவை, உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்து உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல் பகுதியில், ஆண் ஒருவர் தொலைபேசி வயரை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கோவை, ராமநாதபுரம் மற்றும் உக்கடம் காவல் நிலையங்களில் இருந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கீழே இறக்கி, உடலை ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை நிகழ்ந்தது பைபாஸ் சாலையின் முக்கிய இடத்தில் இருப்பதால், ஒரு நேரத்திற்கு மேல் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
error: Content is protected !!