Skip to content
Home » மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் புதிய தேர்….. அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் புதிய தேர்….. அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு  8 லட்சம்  ரூபாய் மதிப்பில்  தேக்கு மரத்தில் தேர் உருவாக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று காலை இந்த தேரோட்டத்தை  துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில்  திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவர்
மு‌.மதிவாணன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.   ேதர் புறப்பாடினை உற்சவர் மண்டபத்தில் துவக்கி வைத்தனர். தோ்  மாணிக்க விநாயகர் சன்னதியை சுற்றி வலம் வந்து மீண்டும் உற்சவர் மண்டபத்தில் நிலைநிறுத்தப்பட்டது.

முன்னதாக மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் , முக்கிய பிரமுகர்கள் பங்கு கொண்டனர்.அப்போது அமைச்சர்கள் முன்னிலையில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலின் பெண் ஓதுவார் ரூபாவதி மாணிக்க விநாயகர் பாடலை பாடினார். இதில் ஏராளமான பக்தர்களும் பங்கேற்றனர்.

உற்சவ காலங்களில் வேண்டுதல் உள்ள பக்தர்கள் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி இத்தேரினை இழுக்கலாம் என கோயில்  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!