Skip to content
Home » மணிப்பூர் சம்பவம்… இந்தியா பதில் சொல்லும்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

மணிப்பூர் சம்பவம்… இந்தியா பதில் சொல்லும்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசுக்கு சொந்தமான இந்த ஆலை உலக அளவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பேப்பர் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டார். பேப்பர் தயாரிக்கும் இயந்திரம், பேக்கிங் இடங்களை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆலை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக அலுவலகத்தில் காகித நிறுவனம் குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. காகித ஆலை அதிகாரிகள் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஆலையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை விரிவுபடுத்தும் விதமாக புதிய திட்டங்களை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த இந்த

ஆலையில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை, சுற்றுச்சூழல் சார்பில் பார்வையிட்டு வருகின்றனர். உலகத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது உலக அளவில் முதல் இரண்டு இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் கலவரம் வரலாற்றில் மிகக் கொடூரமான சம்பவம் இதற்கு ஒன்றிய அரசு நிச்சயமாக கடுமையான நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இதுவரை யாரும் பார்த்திராத கோர சம்பவம் நடைபெற்றுள்ளது‌. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் முதலமைச்சர், அமைச்சர்கள் இது போன்ற சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இது போன்று 50 சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு எல்லாம் INDIA பதில் சொல்லும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!