Skip to content
Home » காதல் திருமண ஜோடியை பிரித்த மணிப்பூர் வன்முறை… குகி பெண் கண்ணீர்

காதல் திருமண ஜோடியை பிரித்த மணிப்பூர் வன்முறை… குகி பெண் கண்ணீர்

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது.  கலவரத்தில் பாதிக்கப்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கி உள்ளனர்.  அதில் ஒரு முகாமில் இருந்த குகி எனப்பெண் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:P

ஒரு ஜோடி கலப்பு திருமண  ஜோடி,  அவர்களில் கணவர் மெய்தி சமூக நபர். அவரது மனைவி குகி சமூக பெண். இதனை அறிந்த முகாமில் இருந்தவர்கள், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர்.கோகிரிசாங் என்ற அந்த இளம்பெண் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஒரு மாதம் வரை கணவருடன் எந்த தொடர்பும் இல்லை. அவரிடம் பேசவும் இல்லை. அவரை தொடர்பு கொண்டபோது, போன் சுவிட்ச்-ஆப் என வந்தது. அவருடைய நிலைமை என்னவென தெரியவில்லை. மெய்தி சமூக நபரை திருமணம் செய்த பின்னர், என்னையும் மெய்தி நபராகவே அடையாளம் காண்பார்கள் என்று நான் நினைத்தேன்.

ஆனால், என்னுடைய ஆதார் அட்டையை பார்த்த முகாமில் இருந்தவர்கள், அதில் உள்ள பெயரின்படி, நான் குகி சமூக பெண் என்றும், மெய்தி பெண் இல்லை என்றும் கூறி கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டனர். எனது குழந்தை, அதன் தந்தையையும் மற்றும் தாத்தா-பாட்டியையும் பார்ப்பதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும், உறுதி செய்ய வேண்டும். எனது கணவருக்கும், உறவினர்களுக்கும் நான் உயிருடனே இருக்கிறேன் என தெரிவித்து கொள்கிறேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார். மணிப்பூரில் வன்முறை பரவி 2 மாதங்கள் ஆன நிலையில், இயல்பு வாழ்க்கை திரும்பாமல் பொதுமக்கள் பதற்றத்துடனேயே வாழ்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!