கரூர் அடுத்த வாங்கப்பாளையம் தீரன் நகரில் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று மரத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் மரத்திலிருந்து ஒருவித சத்தம் வருவதை உணர்ந்து கவனித்துள்ளனர். அதில் பாம்பு ஒன்று அசைந்து கொண்டிருப்பது கண்டு அச்சம் அடைந்து கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில்
தீயணைப்பு படையினர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்தனர். மரத்தின் மேலிருந்த பாம்பை 15 நிமிடங்களுக்குள் லாவகமாக பிடித்து பத்திரமாக மீட்டனர். பின்னர் பிடிபட்ட பா ம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. குடியிருப்பு பகுதியில் மரத்தின் மீது பாம்பு ஊர்ந்து கொண்டிருந்த நிகழ்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.