Skip to content

பொது இடங்களில் மாஸ்க் அவசியம் மத்திய அரசு உத்தரவு

பொது இடங்களில் மாஸ்க் அவசியம் மத்திய அரசு உத்தரவு
வெளிநாடுகளில் பிஎப் 7 என்ற புதிய வகை கொரோனா பரவுவதை அடுத்து இந்தியாவில் அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில், அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா உறுதியான மாதிரிகளை மரபணு ஆய்வகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும். உருமாற்றம் பெற்ற கொரோனா இருப்பது கண்டுபிடிப்பதற்கு இந்த பரிசோதனை பயன்படும்.
மேலும் மருத்துவமனையில் போதிய அளவு படுக்கைகள், உபகரணங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பண்டிகைக் காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர பொது இடங்களில் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *