Skip to content
Home » வெள்ளிவிழா மாணவர் பேரமைப்பினர்30 பேர் திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி விழா

வெள்ளிவிழா மாணவர் பேரமைப்பினர்30 பேர் திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி விழா

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம்  திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது தேவார பாடல் பெற்ற தளத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயிற்காக எமனை சம்காரம் செய்த தலம் என்பதால் அட்டவிரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்கிறது

சிறப்பு மிக்க இவ்வாலயத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராம அய்யர் உயர்நிலைப்பள்ளியில் 1977-78 ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி படித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு 2003 ஆம் ஆண்டு மீண்டும் இணைத்து வெள்ளி விழா மாணவர்கள் பேரமைப்பு என்று அமைப்பை உருவாக்கினர். இவர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரியாக உள்ளனர்.

இந்த அமைப்பினர் ஆண்டுக்கு ஒருமுறை கூடி தங்களது இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொள்வதுடன், தாங்கள் படித்த பள்ளிக்கும், அங்கு தற்போது பயிலும் மாணவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளி விழா மாணவர்கள் பேரமைப்பில் உள்ளவர்களுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததையடுத்து
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு இன்று அதிகாலை வெள்ளி விழா மாணவர்கள் பேரமைப்பு தலைவர் சண்முகானந்தன் தலைமையில் வந்தனர். தொடர்ந்து கோபூஜை, கஜ பூஜை செய்து பின்னர் நூறுகால் மண்டபத்தில் 160 கலசங்கள் வைக்கப்பட்டு 10 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 30 பேர் சஷ்டியப்த பூர்த்தி என்று அழைக்கக்கூடிய அறுபதாம் திருமணம் செய்து சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் செய்தனர்

அவர்களுக்கு கலசஅபிஷேகம் செய்யப்பட்டு மாங்கல்ய தானம் மாலை மாற்றுதல் மற்றும் ஆயுள் ஹோமம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சுவாமி அம்பாள் மற்றும் காலசம்கார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!