சென்னை அருகே திருப்போரூரில் நடந்த கார் விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று (டிச.10) மாமல்லபுரம் சென்று இரவு விருந்தில் பங்கேற்றுவிட்டு, இன்று 2 கார்களில் திரும்பி உள்ளனர். அப்போது 2 கார்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில், ஒரு கார்

வேகமாக லாரி மீது மோதியது. இதில், மிஸ்பா பாத்திமா என்ற மாணவி உயிரிழந்தார். 3 மாணவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

