Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம் 94 அடியாக குறைந்தது

மேட்டூர் அணை நீர்மட்டம் 94 அடியாக குறைந்தது

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு  94.10 அடி. அணைக்கு வினாடிக்கு 176 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10ஆயிரத்து 3 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 57.462 டிஎம்சி.

கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 204 கனஅடியும்,  வெண்ணாற்றில் 5005 கனஅடியும்,  கல்லணை கால்வாயில் 1,011 கனஅடியும், கொள்ளிடத்தில் 1,515 கனஅடியும் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணை பாசனத்திற்காக  கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டது.  அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இன்று 94 அடியாக குறைந்து விட்டது.  2 வாரத்தில் 9 அடி தண்ணீர் குறைந்து உள்ளது.  அதே நேரத்தில்  கடந்த ஆண்டு இதே நாளில்  அணையின் நீர்மட்டம் 107.17 அடியாக இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!