Skip to content
Home » மேட்டூர் அணை நீர் மட்டம் இன்று மாலை 99 அடியாக குறைகிறது

மேட்டூர் அணை நீர் மட்டம் இன்று மாலை 99 அடியாக குறைகிறது

  • by Senthil

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி  குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அன்றைய தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. தினமும் 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.  இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.29 அடி.  அணைக்கு வினாடிக்கு 651 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து  வினாடிக்கு 10 ஆயிரத்து 3  கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரியில்  வினாடிக்கு 3,417 கனஅடியும், வெண்ணாற்றில் 3,403 கனஅடியும்,  கல்லணை கால்வாயில் வினாடிக்கு 501 கனஅடியும், கொள்ளிடத்தில் 816 கனஅடியும் திறந்து விடப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 110.77 அடியாக இருந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  ஏறத்தாழ 150 நாட்களுக்கு பின்னர் இன்று மாலை 100 அடிக்கு கீழ் குறைந்து 99 அடியை தொடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!