Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேட்டூர் அணை நீர்மட்டம் 46.80 அடி ….. ஒரே நாளில் 2.97 அடி உயர்வு

கர்நாடகத்தில் பலத்த மழை கொட்டுவதால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இதனால்  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 20,910 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 46.80 அடி.  அணையில் இருந்து  குடிநீருக்காக  வினாடிக்கு 1,003 கனஅடி திறக்கப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு 15.856 டிஎம்சி.

மேட்டூர் அணையில் நேற்று காலை 8 மணிக்கு நீர்மட்டம் 43.83 அடியாக இருந்தது. இன்று  காலை 46.80 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில்  2.97 அடி உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!