Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

தமிழகத்தில் நடப்பாண்டில் 2-வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆரோக்யாவை தொடர்ந்து, அமிர்தா, வேதா, சன், ராஜ், சக்ரா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட நிறுவனங்கள் நிகழாண்டில் 2– வது முறையாக பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளன.

நடப்பு ஆண்டில் மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் விலை குறைவாகக் கிடைக்கும் ஆவின் பாலை அதிகளவில் நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவின் பாலுக்குக் கடும் தட்டுப்பாடு உருவாகும் வாய்ப்பு.

error: Content is protected !!