Skip to content
Home » அவங்களுக்கு இருக்கு ‘கைலாசா’… அமைச்சர் செந்தில் பாலாஜி ‘லகலக’..

அவங்களுக்கு இருக்கு ‘கைலாசா’… அமைச்சர் செந்தில் பாலாஜி ‘லகலக’..

ஈரோடு கிழக்கு தொகுதி ேஇடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்… அப்போது  ஈரோடு கிழக்கு தொகுதியில் 90 சதவிகித மக்கள், தங்கள் வாக்கு கை சின்னத்திற்கு என்று உறுதி செய்திருக்கிறார்கள். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சாதனைகளே காரணமாக இருக்கிறது. நிச்சயமாக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெறுவார். தொலைக்காட்சியும், பத்திரிகைகளுமே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இருப்பது போல் காட்டுகின்றன. அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கூட பெரியளவில் ஆட்களே இல்லை. அதிமுக கட்சிக்குள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதில் மட்டுமே போட்டியாக இருக்கிறது. அதிமுக 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறது என்று தெரிவித்தார்.
அடுத்த ஆட்சி எங்களுடையது தான் என அதிமுக கூறுவது குறித்த கேள்விக்கு, கைலாசா நாடு என்று சொல்வார்கள். அந்த மாதிரி ஏதாவது ஒரு புதிய பகுதிக்கு சென்றால் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் என்று ஆளுக்கொரு பகுதியாக பிரித்து கொண்டு முயற்சி செய்யலாம். அதிமுக என்ற கப்பலில் ஓட்டை விழுந்து கடலில் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாருங்கள். வாக்கு எண்ணிக்கையின் போது தெரியும் என்ற அமைச்சர் செந்தில்பாலாஜியிடம்  பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பாஜகவில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எத்தனை பூத்களுக்கு பூத் கமிட்டி அமைத்திருக்கிறார்கள். திமுகவில் ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நோட்டாவுடன் போட்டிபோடுவோர் எல்லாம் ஆட்சியமைப்போம் என்று பேசுகிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருப்பதால், தமிழ்நாட்டில் நாட்டாமை செய்து விட முடியாது. இங்கே பாஜகவின் செல்வாக்கு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக பற்றி மக்களின் எண்ணம் என்பதும் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!