Skip to content
Home » 2-3 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவை.. ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு..

2-3 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவை.. ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முழுவதும் சோதனை நடத்தினர். சோதனை நிறைவடைந்தவுடன் இன்று அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,” மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டபோது உயரத்த அழுத்தம் 160-100 ஆக இருந்தது. இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார். சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!