Skip to content
Home » குழந்தை கை அகற்றம்…. கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை…. அமைச்சர் மா.சு.

குழந்தை கை அகற்றம்…. கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை…. அமைச்சர் மா.சு.

கை அகற்றப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது. அந்த குழந்தையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்த்து நலம் விசாரித்தார்.  பின்னர் அமைச்சர். மா.சு நிருபர்களிடம் கூறியதாவது:

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வதந்திகளை பரப்புகிறார். இதுபோன்ற வதந்திகளை பரப்புவது நல்லதல்ல. குழந்தை இறந்துவிட்டதாக வதந்தி பரப்புவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும்.  குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் நாளை மாலைக்குள் அதற்கான அறிக்கை வரும். இது கவன குறைவால் ஏற்படவில்லை என எழும்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  குழந்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் தவறு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.உரிய விசாரணைக்குப் பின் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். குழந்தை விவகாரத்தில் கவனக்குறைவு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!