தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்ட மன்றத் தொகுதியில், இந்து சமய அற நிலையத்துறை கோரிக்கைகள் தொடர்பாக, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா நேற்று சந்தித்துப் பேசினார்.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு லிப்ட் வசதி செய்து தரப்படும் என்கிற மானியக் கோரிக்கை அறிவிப்பின் படி, இத் திட்டத்தின் தற்போதைய நிலை பற்றியும், சுவாமிமலை பேரூர்க்கு பெருமளவில் பக்தர்கள் வந்து செல்வதால் அங்கு மேற்க் கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மேலும் தொகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் இச் சந்திப்பின் போது அமைச்சரிடம் ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆலோசனைகள் மேற்கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார்.
