திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்றத் துணைத் தலைவருமான கே.என்.நேரு இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்கு காரணமான வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று 51, 52, 53, 54, 55 மற்றும் 56 ஆகிய வார்டுக்கு உட்பட்ட செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார்,

மார்சிங் பேட்டை, அந்தோணியார் கோவில் தெரு, கான்வென்ட் ரோடு, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை,
ராஜா காலனி,பெரிய மிளகு பாறை,
கருமண்டபம், ராம்ஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் வழிநெடுகிலும் பொதுமக்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் திரண்டு வந்து அவருக்கு மலர் தூவியும், பொன்னாடைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர், தொகுதி மக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி, திருச்சி மேற்கு தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என உறுதி அளித்தார்.
இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், பகுதிச் செயலாளர் மோகன்தாஸ், கோட்ட தலைவர் துர்கா தேவி,மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
