Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செங்கிப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தொடக்க கூட்டுறவு மேலாண்மை கடன் சங்கங்களின் மூலம் பெறப்பட்ட கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏர் உழவன் விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் வாழைத்தார் கரும்பு நெற்பயிர் உடன் செங்கிப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு மேலாண்மை கடன் சங்கங்களின் மூலம் பெறப்பட்ட பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் மத்திய அரசு உயர்த்தி உள்ள உரங்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் கர்நாடக அரசு அறிவித்துள்ள மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் அனைத்து பகுதி விவசாயிகள் இணைந்து ஏர் உழவன் விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு. இதில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி கரும்பு மற்றும் நெற்பயிர் வாழைத்தார் ஆகியவற்றுடன் சாணார்பட்டி சாலையில் பேரணியாக வந்து செங்கிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!